ADDED : பிப் 06, 2024 08:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே தண்டரை பகுதியில் உள்ள பாலாற்றில், இரவு நேரத்தில் ஆற்று மணல் திருடப்படுவதாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் தண்டரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தியபோது, ஓட்டுனர் தப்பியோடினார்.
ஆட்டோவை சோதனை செய்ததில், பாலாற்றில் இருந்து மணல் திருடியது தெரிய வந்தது. பின், ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், தண்டரை கிராமம், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகன், 36, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.

