/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி மாணவன் கடலில் மூழ்கி இறப்பு
/
பள்ளி மாணவன் கடலில் மூழ்கி இறப்பு
ADDED : நவ 27, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், நவ. 27-
கடலில் மூழ்கிய பள்ளி மாணவனின் உடல் கரை ஒதுங்கியது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேங்கடரத்தினம், திருப்போரூர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது மகன் பிரமையன், 16, அப்பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
நேற்று முன்தினம், உடன் பயிலும் நண்பர்களுடன், மாமல்லபுரம் அடுத்த, சூலேரிக்காடு பகுதி கடலில் குளித்தபோது, நீரில் மூழ்கி மாயமானார். மாமல்லபுரம் போலீசார், அவரை தேடிய நிலையில், நேற்று மாலை 5:35 மணிக்கு, கொக்கிலமேடு கடற் கரையில், உடல் கரை ஒதுங்கியது.
போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

