/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டுகோள்
/
செய்யூர் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டுகோள்
செய்யூர் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டுகோள்
செய்யூர் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டுகோள்
ADDED : ஆக 24, 2025 01:47 AM
செய்யூர்:செய்யூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்யூர் பஜார் வீதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு புறநோயாளிகள், அவசர சிகிச்சை நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் என, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இங்கு சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர்கள் ஓய்வு அறை கட்டப்பட்டது, இதை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது ஓய்வு அறையில் இருக்கை வசதி இல்லாததால், பார்வையாளர்கள் மற்றும் புறநோயாளிகள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மர நிழலில் அமரும் நிலை உள்ளது.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புறநோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.