/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் புதிதாக சமூக நலக்கூடம் அமைக்க கோரிக்கை
/
சிங்கபெருமாள் கோவிலில் புதிதாக சமூக நலக்கூடம் அமைக்க கோரிக்கை
சிங்கபெருமாள் கோவிலில் புதிதாக சமூக நலக்கூடம் அமைக்க கோரிக்கை
சிங்கபெருமாள் கோவிலில் புதிதாக சமூக நலக்கூடம் அமைக்க கோரிக்கை
ADDED : டிச 23, 2025 05:46 AM

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், சமூக நலக்கூடம் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் உள்ளன. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.
ஒரகடம், மகேந்திரா சிட்டி, மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருவோர், இங்கு குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் ரயில்வே ஸ்டேஷன் தெருவில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, பாழடைந்த சமூக நலக்கூடம் உள்ளது.
பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள இதில், ஊராட்சியின் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக இப்பகுதி மக்கள், தனியார் திருமண மண்டபங்களில் அதிக கட்டணம் செலுத்தி, தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய சூழல் உள்ளது.
இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது:
புறநகரில் வளர்ந்து வரும் ஊராட்சியில், சிங்கபெருமாள் கோவில் முக்கியமானது. இங்கு சமூக நலக்கூடம் பயன்பாடு இல்லாமல் உள்ளதால், ஏழை மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், இங்கு உள்ள தனியார் மண்டபங்களில் நாளுக்கு நாள் கட்டணம் அதிகரித்து வருகிறது.
மேலும், வாகனங்கள் நிறுத்த முறையான வசதிகள் இல்லை.
எனவே, பழைய சமூக நலக்கூடத்தை இடித்து அகற்றிவிட்டு, நவீன வசதிகளுடன் சமூக நலக்கூடம் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

