/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் கோரிக்கை மனு பெட்டி
/
செங்கையில் கோரிக்கை மனு பெட்டி
ADDED : மார் 19, 2024 03:40 AM

செங்கல்பட்டு, : லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள், கடந்த 16ம் தேதியில் இருந்து, வரும் ஜூன் 4ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், திங்கள் கிழமைதோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீர்வுகூட்டம், மனுநீதி நாள் முகாம், விவசாய குறை தீர்வு கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெறாது.
கலெக்டர் அலுவலகம், சப்- - கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்துஅலுவலகங்களில், மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, அதற்கென்று வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்க்கலாம் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில், மனுக்களை பொதுமக்கள் நேற்று செலுத்தினர்.
இந்த மனுக்களை பெற்று, உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

