/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெம்மேலி கடலரிப்பு பாதிப்பு கடலில் இறங்கி போராட்டம்
/
நெம்மேலி கடலரிப்பு பாதிப்பு கடலில் இறங்கி போராட்டம்
நெம்மேலி கடலரிப்பு பாதிப்பு கடலில் இறங்கி போராட்டம்
நெம்மேலி கடலரிப்பு பாதிப்பு கடலில் இறங்கி போராட்டம்
ADDED : நவ 15, 2024 08:18 PM
மாமல்லபுரம்:நெம்மேலியில் கடலரிப்பை தடுக்க, நேர்கல் தடுப்பு அமைக்கக் கோரி, மீனவர்கள் கடலில் இறங்கி நுாதன போராட்டம் நடத்தினர்.
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சி மீனவ பகுதியில், பல ஆண்டுகளாக கடலரிப்பு ஏற்படுகிறது.
சூலேரிக்காடு மீனவ பகுதி கடலரிப்பை தடுக்க அமைக்கப்பட்ட நேர்கல் தடுப்பு, கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை பாதுகாப்பிற்காக, கடற்கரையில் அமைக்கப்பட்ட கல் தடுப்பு ஆகியவற்றால், நெம்மேலியில் கடல்நீர் நிலத்தில் புகுவது அதிகரிக்கிறது.
கடல் வீடுகளை சூழும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இங்கு நேர்கல் தடுப்பு அமைக்க, அரசு முடிவெடுத்தும் தாமதமாகிறது. இதை விரைந்து அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மீனவர்கள், நேற்று காலை கடலில் இறங்கி, நுாதன போராட்டம் நடத்தினர். மீன் பிடியையும் புறக்கணித்தனர்.