/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வில்லியம்பாக்கம் டாஸ்மாக் கடை வேறிடத்திற்கு மாற்றக்கோரி மனு
/
வில்லியம்பாக்கம் டாஸ்மாக் கடை வேறிடத்திற்கு மாற்றக்கோரி மனு
வில்லியம்பாக்கம் டாஸ்மாக் கடை வேறிடத்திற்கு மாற்றக்கோரி மனு
வில்லியம்பாக்கம் டாஸ்மாக் கடை வேறிடத்திற்கு மாற்றக்கோரி மனு
ADDED : பிப் 07, 2024 09:46 PM
செங்கல்பட்டு,:வில்லியம்பாக்கத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை, வேறிடத்திற்கு மாற்றக்கோரி, கலெக்டரிடம் பா.ஜ., நிர்வாகி மனு அளித்தார்.
காட்டாங்கொளத்துார் பா.ஜ., மேற்கு ஒன்றிய செயலர் விஜயகுமார், கலெக்டர் அருண்ராஜிடம் அளித்த மனு விபரம் வருமாறு:
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கூட்டுறவு வங்கி, நியாய விலை கடை உள்ளன.
இப்பகுதியினர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பணிக்காக, ரயில் நிலைத்திற்கு நடந்து சென்று, ரயிலில் பயணம் செய்கின்றனர்.
இதே ஊராட்சி பகுதியில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடைக்கு வாகனங்களில் வருவோர் அதிவேகமாக வருகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. பெரிய அசம்பாவிதங்கள் நடப்பதற்குள், டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்.

