sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நடைபாதை இடிந்து விழும் அபாயம் பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

/

நடைபாதை இடிந்து விழும் அபாயம் பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

நடைபாதை இடிந்து விழும் அபாயம் பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

நடைபாதை இடிந்து விழும் அபாயம் பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை


ADDED : ஆக 20, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் நடைமேம்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் அருகில் உள்ள நடைபாதை பெயர்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.

திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

அடிக்கடி விபத்து இது தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை. இந்த சாலையில் பெருங்களத்துார் ‍-- செட்டி புண்ணியம் வரை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோ வில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதி யில் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையை கடக்கும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.

இந்த பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் சிங்கப்பெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை சந்திப்பு அருகில் சாலை குறுக்கே நடைமேம்பாலம் அமைக்கும் பணி ஆறு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

மழைநீர் வடிகால்வாய் இருந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று வர அமைக்கப்பட்ட நடைபாதை கடந்த வாரம் பெய்த மழையில் பெயர்ந்துள்ளது.

இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டுமானத்தில் மக்கள் சென்று வருகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி.,சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இங்கு முறையாக அணுகு சாலை இல்லாததால் எதிர் திசையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.

முன்னெச்சரிக்கை இந்நிலையில், நடைமேம்பால பணிகள் மிகவும் மந்த நிலையில் நடைபெற்று வருகின்றன. தோண்டப்பட்ட பள்ளத்தில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த பள்ளத்தை சுற்றி எந்தவொரு எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் வகையிலான ரிப்ளக்டர்கள் இல்லை. ஏதேனும் விபத்து ஏற்படும் முன் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக் கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us