/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
/
கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ADDED : மார் 09, 2024 10:45 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே மாமண்டூர் அங்கன்வாடி மையத்தில், கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில், நேற்று செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் அனாமிகா பங்கேற்று ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 'போஷன் பக்வாடா 2024' திட்டத்தின் மூலம், ஊராட்சியில் உள்ள 10 கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய பல்வேறு வகையான சிறுதானிய உணவு தானியங்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
மேலும், 20 அங்கன்வாடி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் எழுது பொருட்கள் அடங்கிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
கர்ப்பிணியரிடம் உரையாடிய கூடுதல் ஆட்சியர் அனாமிகா, 'ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிறுதானிய உணவுகளே ஆரோக்கியத்துக்கு உகந்தது. ரத்த சோகை தவிர்க்க சத்தான உணவு சாப்பிட வேண்டும்' என அறிவுறுத்தினார்.
இதில், மாவட்ட திட்ட அலுவலர், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நந்திதா, ஊராட்சி தலைவர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

