/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு அருகே புது மணப்பெண் தற்கொலை
/
செங்கல்பட்டு அருகே புது மணப்பெண் தற்கொலை
ADDED : டிச 22, 2025 04:24 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் அருகே, புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் அருகே பொன்பதர்கூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 28.
இவருக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த இந்திரா, 25, என்ற பெண்ணிற்கும், கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி 11 மாதமான நிலையில், குழந்தை இல்லை என உறவினர்கள் கூறியதால், இந்திரா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்திரா, தன் அறையில் புடவையால் துாக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
புதுமணப்பெண் இறப்பு குறித்து, கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

