/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழங்குடியின மக்கள் 740 பேருக்கு புதிய ரேஷன் கார்டு
/
பழங்குடியின மக்கள் 740 பேருக்கு புதிய ரேஷன் கார்டு
பழங்குடியின மக்கள் 740 பேருக்கு புதிய ரேஷன் கார்டு
பழங்குடியின மக்கள் 740 பேருக்கு புதிய ரேஷன் கார்டு
ADDED : ஆக 25, 2025 01:15 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பழங்குடியின மக்கள் 740 பேருக்கு புதிய ரேஷன் கார்டு, வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகா பகுதியில், இருளர் மற்றும் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், ரேஷன் கார்டு வழங்ககோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனு மீது விசாரணை செய்து, ரேஷன் கார்டு வழங்க, மாவட்ட வழங்கல் அலுவருக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.
அந்தந்த தாலுகாவில், இருளர், நறிக்குறவர் இருப்பிடங்களுக்கு சென்று வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆய்வு செய்து மாவட்ட வழங்கல் அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆறு தாலுகாவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் 740 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.