/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தின போட்டி
/
தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தின போட்டி
ADDED : மார் 11, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த ஆலத்துார் சிட்கோ வளாகத்தில் உள்ள எஸ்.வி.கெம் நிறுவனத்தின் சார்பில், 53வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், பாதுகாப்பு குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கருத்துரை வழங்கப்பட்டது. வினாடி - வினா, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதை தொடர்ந்து, அனைவரும் பாதுகாப்பு அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்தனர். அதேபோல், மகளிர் தின விழாவை ஒட்டி, 'பெண்களை முதன்மைபடுத்துங்கள்; பெண்களின் முன்னேற்றத்தை ஊக்கப்படுத்துங்கள்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது.

