/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை, திருப்போரூரில் மா.கம்யூ., போராட்டம்
/
செங்கை, திருப்போரூரில் மா.கம்யூ., போராட்டம்
ADDED : ஆக 21, 2025 02:10 AM

திருப்போரூர்,:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், திருப்போரூர் ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளுக்கான மின்சார இணைப்புக்கு, தடையில்லா சான்று கோரி பேரணி மற்றும் மனு கொடுக்கும் போராட்டம், திருப்போரூரில் நேற்று நடந்தது.
ஒன்றிய குழு உறுப்பினர் லிங்கன் தலைமை வகித்தார்.
திருப்போரூர் ரவுண்டானாவில் புறப்பட்ட பேரணி, செங்கல்பட்டு சாலை, மேட்டுத்தண்டலம் பிரதான சாலை வழியாக, தாலுகா அலுவலகத்தில் முடிந்தது.
அப்போது, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகத்சிங்தாஸ், ஒன்றிய செயலர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றி, கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த திருப்போரூர் தாசில்தார் சரவணன் பேச்சு நடத்தினார்.
அதன் பின், அவர்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
செங்கல்பட்டு செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பகுதிக்குழு செயலர் வேலன் தலைமையில், செங்கல்பட்டு தாலுகா அலுவலகம் பகுதியில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.