/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலா திரிபுரசுந்தரி கோவில் இன்று கும்பாபிஷேகம்
/
பாலா திரிபுரசுந்தரி கோவில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : பிப் 26, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிபுலம் : மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், பாலா பீடம் சார்பில், பாலா லலிதா பரமேஸ்வரியின் அம்சாவதாரமான பாலா திரிபுரசுந்தரிக்கு, புதிதாக கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பிரதானமாக பாலா திரிபுரசுந்தரி மற்றும் லலிதா பரமேஸ்வரி, தேவி கருமாரி, வல்லப கணபதி, பாலமுருகன் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர்.
கடந்த பிப்., 23ம் தேதி, மஹா கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகள் துவக்கப்பட்டன. இன்று காலை 9:00 - 9:30 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

