/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி
/
10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி
10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி
10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி
ADDED : டிச 24, 2025 06:09 AM

அச்சிறுபாக்கம்: களத்துார் ஊராட்சியில் ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, 10 ஆண்டுகளாக திறக்கப் படாமல், வீணாகி வருகிறது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், ஜே.ஜே., நகர் குடியிருப்பு பகுதி மக்களின் தேவைக்காக, கரசங்கால்- கொங்கரை சாலையில், 2015 --- 16ம் ஆண்டில், 6.30 லட்சம் ரூபாயில், ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப் பட்டது.
கட்டடம் கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், கட்டடத்தை திறக்காததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தற்போது, 2 கி.மீ., துாரம் சென்று, வேறு இடத்தில் உள்ள கடைக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வர, முதியோர் மற்றும் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடையை திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.