/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் தடத்தில் புதிய பாலப்பணி துவக்கம்
/
திருக்கழுக்குன்றம் தடத்தில் புதிய பாலப்பணி துவக்கம்
திருக்கழுக்குன்றம் தடத்தில் புதிய பாலப்பணி துவக்கம்
திருக்கழுக்குன்றம் தடத்தில் புதிய பாலப்பணி துவக்கம்
ADDED : மார் 09, 2024 10:35 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் இருந்து எச்சூர் வழியே, திருக்கழுக்குன்றத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. மாமல்லபுரத்தை, செங்கல்பட்டு உள்ளிட்ட மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
இந்த சாலையில் வடகடம்பாடி, காரணை, குழிப்பாந்தண்டலம், புலிகுன்றம் உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன. இச்சாலை வழியே தினமும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் என, ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையில், இந்த சாலையில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குறுகிய குழாய் பாலங்கள் அதிக இடங்களில் உள்ளன. ஆனால், இன்றைய வாகன பெருக்கத்திற்கேற்ப அகலமாக இல்லை. மேலும், பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மழைநீர் செல்லவும் இயலவில்லை.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை, பழைய பாலங்களை அகற்றி விட்டு, புதிய கான்கிரீட் பாலங்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், குழிப்பாந்தண்டலம் பகுதியில் உள்ள கரடுமுரடாக சீரழிந்த சாலையையும் சீரமைத்து வருகிறது.

