/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஹாக்கி உலக கோப்பை செங்கை வந்தடைந்தது
/
ஹாக்கி உலக கோப்பை செங்கை வந்தடைந்தது
ADDED : நவ 26, 2025 04:52 AM

மறைமலை நகர்: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டிகள், வரும் 28 முதல் டிச., 10ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளன.
இந்த போட்டிக்கான கோப்பையை, துணை முதல்வர் உதயநிதி, கடந்த 10ம் தேதி சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர் நிகழ்வாக இந்த உலக கோப்பை, பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று காலை, செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்திற்கு கோப்பை வந்தடைந்தது.
செங்கல்பட்டு கலெக்டர் சினேகா உலக கோப்பையை அறிமுகப்படுத்தினார். முன்னதாக சிலம்பாட்டம், கோலாட்டம் மற்றும் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

