/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறுகிய சாலையில் அதிவேக பயணம் ஆம்னி பஸ்களுக்கு கட்டுப்பாடு அவசியம்
/
குறுகிய சாலையில் அதிவேக பயணம் ஆம்னி பஸ்களுக்கு கட்டுப்பாடு அவசியம்
குறுகிய சாலையில் அதிவேக பயணம் ஆம்னி பஸ்களுக்கு கட்டுப்பாடு அவசியம்
குறுகிய சாலையில் அதிவேக பயணம் ஆம்னி பஸ்களுக்கு கட்டுப்பாடு அவசியம்
ADDED : ஆக 23, 2025 01:09 AM

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கத்திலிருந்து, அய்யஞ்சேரி சாலை வழியாக ஜி.எஸ்.டி., சாலைக்கு அசுர வேகத்தில் பயணிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு, வார நாட்களில் 200 ஆம்னி பேருந்துகளும், விடுமுறை நாட்களில் 500க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளும் இயக்கப் படுகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து புறப்பட்டு, அய்யஞ்சேரி சாலை வழியாக, ஜி.எஸ்.டி., சாலையை வந்தடைகின்றன. இந்த அய்யஞ்சேரி சாலை, 20 அடி அகலமே உள்ள நிலையில், இரவு நேரத்தில் ஆம்னி பேருந்துகள், அதிவேகத்தில் பயணிக்கின்றன.
இதனால், அந்த வழியாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், விபத்து அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
அய்யஞ்சேரி சாலையோரம் உள்ள தெருக்களில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இரவு 7:00 மணிக்கு மேல் இந்த சாலையில், ஐந்து நிமிட இடைவெளியில் ஒரு ஆம்னி பேருந்து செல்கிறது.
ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்லும் வரை, அதிவேகத்தில் இப்பேருந்துகள் செல்வதால், அப்பகுதியில் வசிப்போரும் பீதியடைகின்றனர்.
தவிர, விதவிதமான வண்ணங்களில், கண்களை கூசச் செய்யும் விளக்குகளோடு, அதிக ஒலி எழுப்பியபடி பயணிக்கின்றன.
இதனால், சாலையின் எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சமடைகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஆம்னி பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.