/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உய்யாலிகுப்பம் மீனவர் இட உரிமை ஆவணத்துடன் தாசில்தாரிடம் விளக்கம்
/
உய்யாலிகுப்பம் மீனவர் இட உரிமை ஆவணத்துடன் தாசில்தாரிடம் விளக்கம்
உய்யாலிகுப்பம் மீனவர் இட உரிமை ஆவணத்துடன் தாசில்தாரிடம் விளக்கம்
உய்யாலிகுப்பம் மீனவர் இட உரிமை ஆவணத்துடன் தாசில்தாரிடம் விளக்கம்
ADDED : நவ 29, 2024 08:31 PM
புதுப்பட்டினம்:புதுப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்த மீனவர் பகுதி மற்றும் வாயலுார் ஊராட்சியைச் சேர்ந்த உய்யாலிகுப்பம் மீனவர் பகுதி ஆகியவை, அருகருகில் உள்ளன.
இரண்டு ஊராட்சிப் பகுதிகளின் எல்லையில், புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில், ஒன்றியக்குழு நிதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
இத்தெரு கிழக்கு மேற்காக உள்ளது. இதனுடன், வடக்கு தெற்காக உள்ள மற்றொரு தெரு இணைகிறது. இதிலும் கான்கிரீட் சாலையை நீட்டிக்க முயற்சிக்கப்பட்டது.
இதன் குறிப்பிட்ட பகுதி, உய்யாலிகுப்பத்திற்கு உட்பட்டதாக கூறி, அப்பகுதி மீனவர்கள் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணியையும் தடுத்து நிறுத்தினர். இவ்விவகாரம் குறித்து, இரண்டு தரப்பினரும் போராட்டம் நடத்தி, கலெக்டர் அருண்ராஜிடம் முறையிட்டனர்.
இரண்டு பகுதிகளின் எல்லை விவகாரம் குறித்து, சப் - கலெக்டர் நாராயணசர்மா இரு தரப்பினரிடமும் விசாரித்தார். இரண்டு ஊராட்சிகளின் எல்லைப் பகுதியை அளவிட்டு வரையறுக்குமாறு, திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் அறிவுறுத்தினார்.
எல்லை விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண கருதி, செங்கல்பட்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், உய்யாலிகுப்பம் மீனவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், உய்யாலிகுப்பம் மீனவ சபையினருடன், தாசில்தார் ராதா நேற்று பேசினார். தாங்கள் கிரயத்திற்கு இடம் வாங்கி, உய்யாலிகுப்பம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்காக, மீன்வளத் துறையிடம் நீண்டகாலத்திற்கு முன்பே ஒப்படைத்தது குறித்து, பத்திர ஆவணங்களுடன், மீனவர்கள் தாசில்தாரிடம் விளக்கினர்.
அதைத் தொடர்ந்து, அவரது அறிவுறுத்தலின்பேரில், இச்சங்கம் பெயரில் பட்டா வழங்கக் கோரி, தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளததாக, உய்யாலிகுப்பம் மீனவர்கள் தெரிவித்தனர்.

