/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தையூரில் 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்
/
தையூரில் 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்
ADDED : டிச 21, 2025 05:34 AM

திருப்போரூர்: தை யூர் பகுதியில் உள்ள அக் ஷயா டுடே என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை ஆடல் பாடலுடன் செம ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில் தினமலர் நாளிதழ் சார்பில் 'கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
இதற்க்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
நேற்று சென்னை கேளம்பாக்கம் அருகே ஓ.எம்.ஆர்., சாலை தையூர் ஊராட்சியில் உள்ள அக் ஷயா டுடே என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது.
நிகழ்ச்சியில், தினமலர் நாளிதழ் மற்றும் ஓ.எம்.ஆர்., அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் உடன் காசா கிராண்ட் நிறுவனம், ஹூண்டாய், ஹாக்ட் பைபர் நெட், எம்.ஜி.எம்., டிஸ் வேர்ல்ட், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜா மற்றும் ஹோம் கேர் ப்ரோடக்ட், பெப்ஸ் இந்தியா பேவரெட் ஸ்ப்ரிங் மேட்ரிஸ், பிரியோ 'டிவி' தமீரா ஈவன்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்தன.
மாலை 4:00 மணிக்கு விழா துவங்கியது. குடியிருப்பின் குட்டிஸ் முதல் பெரியோர் வரை வர களைக்கட்ட துவங்கியது. 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் அப்பல்லோவின் இலவச மருத்துவ மையம், கார் விற்பனை, ஆடை வி ற்பனை, இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், ஐஸ்கிரீம் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜம்பிங் பலுான், பலுான் ஷூட்டிங், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்றன.
மினி மாரத்தான், மேஜிக் ஷோ, கோலப் போட்டி, ஆடல், பாடல், கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். இரவு 9:00மணி வரை விழாக்கோலம் பூண்டது. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமலர் சார்பில் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தியது மகிழ்சியாக உள்ளது. மன அழுத்தம் எல்லாம் பறந்து போனது. ஒரு பொழுதுபோக்காக இருந்தது. குழந்தைகள் எல்லாம் 'என்ஜாய்' பன்னாங்க. மினி மாரத்தான் போன்ற போட்டியில் பங்கேற்றோம். - எஸ்.காயத்ரி. 33 அடுக்குமாடி குடியிருப்பு இந்த அப்பார்ட்மென்ட்டில் இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கிவில்லை. அதிக கேம்ஸ் விளையாடினோம். மேடையில் நடனமாடினோம். எல்லாமே நன்றாக இருந்தது. நான் மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளேன். - எஸ். ஹர்ஷிதா, 13 அடுக்குமாடி குடியிருப்பு கொஞ்ச நாளாக இந்த பகுதியில் செய்தித்தாள் கிடைக்காமல் இருந்தது. தினமலர் ஆண்டு சந்தா கட்டணம் செலுத்தி உறுப்பினராகியுள்ளேன். தினமலரில் வரும் செய்திகள் எல்லாம் நல்லதாக உள்ளது. இந்த மாதிரியான நிகழ்ச்சி குடியிருப்பு மக்கள் எல்லாரையும் ஒன்றிணைக்க வைத்துள்ளது. - கே.ஆர்.குமார். 66 அடுக்குமாடி குடியிருப்பு.

