/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிண்டியில் தொடரும் குழாய் உடைப்பு மருத்துவமனையில் குடிநீர் வினியோகம் தடை
/
கிண்டியில் தொடரும் குழாய் உடைப்பு மருத்துவமனையில் குடிநீர் வினியோகம் தடை
கிண்டியில் தொடரும் குழாய் உடைப்பு மருத்துவமனையில் குடிநீர் வினியோகம் தடை
கிண்டியில் தொடரும் குழாய் உடைப்பு மருத்துவமனையில் குடிநீர் வினியோகம் தடை
ADDED : பிப் 05, 2024 07:19 AM

கிண்டி : அடையாறு மண்டலம், 168வது வார்டில், கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை உள்ளது. கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து, குழாய் வழியாக மருத்துவமனைக்கு குடிநீர் செல்கிறது.
அதேபோல், கிண்டி, சைதாப்பேட்டையில் உள்ள 10,000த்துக்கும் மேற்பட்ட வீடு, தொழில் நிறுவனங்களுக்கும், இங்கிருந்து குடிநீர் செல்கிறது. இதற்காக, சாலைக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.
மின் கேபிள் பதிக்க பள்ளம் தோண்டும்போதெல்லாம், குழாயில் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இரு நாட்களுக்கு முன், ஆலந்துார் சாலையில் தோண்டிய பள்ளத்தால், மருத்துவமனைக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தடைபட்டது.
இந்நிலையில், வாட்டர் ஒர்க்ஸ் சாலையில் நேற்று பள்ளம் தோண்டியதில், பெரிய அளவில் குழாய் சேதமடைந்தது. இதனால், குடிநீர் வினியோகம் தடைபட்டு, மருத்துவமனையில் தண்ணீர் கிடைக்காமல், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். 10,000 குடும்பத்தினருக்கும் குடிநீர் கிடைக்கவில்லை.
இது குறித்து, வார்டு மக்கள் கூறியதாவது:
அனைத்து தேவைகளுக்கும், வாரியம் வழங்கும் குடிநீரை நம்பி இருக்கிறோம். குழாயை ஒட்டி மின் கேபிள் பதிக்கும் பணி, மின்வாரிய அதிகாரிகள் மேற்பார்வையில் நடக்க வேண்டும்.
ஆனால், வெளி மாநில ஊழியர்களை வைத்து பள்ளம் தோண்டுவதால், அவர்களுக்கு குடிநீர் குழாயின் முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியமாக சேதப்படுத்தி விடுகின்றனர்.
தண்ணீர் வினியோகம் தடைபடுவதால், மருத்துவமனையில் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குழாயில் தொடர்ந்து உடைப்பு ஏற்படுவது ஏன் என, மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதிலளித்தனர். உயரதிகாரிகள் தலையிட்டு, குழாய்க்கு பாதிப்பு இல்லாமல் கேபிள் பதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

