/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாறு பாலத்தில் பஸ் பழுது போக்குவரத்து கடும் பாதிப்பு
/
பாலாறு பாலத்தில் பஸ் பழுது போக்குவரத்து கடும் பாதிப்பு
பாலாறு பாலத்தில் பஸ் பழுது போக்குவரத்து கடும் பாதிப்பு
பாலாறு பாலத்தில் பஸ் பழுது போக்குவரத்து கடும் பாதிப்பு
ADDED : டிச 13, 2024 02:17 AM

செங்கல்பட்டு:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், போளூர் செல்லும் அரசு பேருந்து, நேற்று மாலை 50 பயணியருடன் சென்றது.
ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு பாலாற்று பாலத்தின் மீது சென்ற போது, பேருந்து திடீரென பழுதடைந்தது. இதையடுத்து பயணியர், அனைவரும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்து பாலத்தில் பழுதடைந்ததால், பின்னால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
இதன் காரணமாக, பாலாற்று பாலத்தில் இருபுறமும் 2 கி.மீ., துாரத்திற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர்.