/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேளாண் வளர்ச்சி திட்டம் செங்கையில் இன்று முகாம்
/
வேளாண் வளர்ச்சி திட்டம் செங்கையில் இன்று முகாம்
ADDED : பிப் 27, 2024 10:53 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம், இன்று நடக்கிறது.
வேளாண்மை இணை இயக்குனர் அசோக் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 2023- - 24ம் ஆண்டுக்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சித்தாலப்பாக்கம் வட்டாரங்களில் உள்ள, 73 கிராம ஊராட்சிகளில், இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில், வேளாண் துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியில் துறை சார்ந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்களும் நடக்கின்றன. இம்முகாமில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

