/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் உயிரியல் பூங்காவில் புற்கள் வளர்ச்சிக்கு நடவடிக்கை
/
வண்டலுார் உயிரியல் பூங்காவில் புற்கள் வளர்ச்சிக்கு நடவடிக்கை
வண்டலுார் உயிரியல் பூங்காவில் புற்கள் வளர்ச்சிக்கு நடவடிக்கை
வண்டலுார் உயிரியல் பூங்காவில் புற்கள் வளர்ச்சிக்கு நடவடிக்கை
ADDED : நவ 30, 2024 12:26 AM

தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், தாவர உண்ணிகளின் இருப்பிடங்களில், மண்ணின் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில தாவர உண்ணிகளின் இருப்பிடங்களில் உள்ள மண் இறுகி, புற்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இவற்றை கண்டறிந்த பூங்கா நிர்வாகம், நீர் சேமிப்பு குளங்களை சமீபத்தில் துார்வாரி புதுப்பித்தது.
அப்போது, தாவர உண்ணிகளின் இருப்பிடங்களை செறிவூட்ட, துார் வாரப்பட்ட மண்ணை, அந்த இருப்பிடங்களில் நிரப்பி, மேம்படுத்தியது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக காட்டு மாடு, மான் உள்ளிட்ட எட்டு விலங்கு இருப்பிடங்களில், இறுகிய மண்ணை உழுது, வளமான குளத்து மண் சேர்க்கப்பட்டது. அங்கு பச்சை புல் விதைகளை விதைத்து புத்துயிர் உண்டாக்கப்பட்டது.
இதன் வாயிலாக, இருப்பிடங்களில் விலங்குகளுக்கு இயற்கையான தீவனங்கள், அதன் இருப்பிடத்திலேயே கிடைப்பதுடன், விலங்குகளின் இயற்கை வாழ்விடமாகவும் மாறியுள்ளது.