/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமிக்கு 'லவ் டார்ச்சர்' 52 வயது நபர் கைது
/
சிறுமிக்கு 'லவ் டார்ச்சர்' 52 வயது நபர் கைது
ADDED : பிப் 06, 2024 10:36 PM
அண்ணா நகர்:அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும், 16 வயதுடைய சிறுமி, பிளஸ் 1 படித்து வருகிறார். மாணவியை, கடந்த ஓராண்டாக, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், 52, என்பவர் காதலிக்க வற்புறுத்தி, தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மாணவியை வழிமறித்த அவர், சினிமா பாணியில் மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார். தகவலறிந்த மாணவியின் குடும்பத்தினர், இதுகுறித்து, அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார், சுந்தரராஜனை பிடித்து விசாரித்ததில், அவருக்கு திருமணமாகி, 20க்கு மேற்பட்ட வயதில் மூன்று மகள், மகன்கள் இருப்பதும், குடும்பத்தினர் பெங்களூரில் வசிப்பதும் தெரியவந்தது. மேலும், மாணவியை காதலிக்க வற்புறுத்தி, தொல்லை கொடுத்ததும் உறுதியானது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

