/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழிற்சாலைகள் இடையே 8 ஓவர் கிரிக்கெட் போட்டி..
/
தொழிற்சாலைகள் இடையே 8 ஓவர் கிரிக்கெட் போட்டி..
ADDED : பிப் 05, 2024 08:22 AM

கும்மிடிப்பூண்டி : சென்னை பிரசாந்த் மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கம், சோழவரம் முதல் ஸ்ரீ சிட்டி வரை உள்ள தொழிற்சாலைகளின் மனித வளத்துறை அமைப்பு சார்பில், தொழிற்சாலைகளுக்கு இடையேயான 8 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே டி.ஜெ.எஸ்., பொறியியல் கல்லுாரியில், ஐந்து நாட்கள் நடந்த இப்போட்டிகளில், 36 அணிகள் பங்கேற்றன.
நேற்று நடந்த இறுதி போட்டியில், சதர்ன் ஆட்டோ காஸ்டிங்க்ஸ் அணி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில், காமாட்சி ஸ்டீல் அணியை வென்றது.
முதல் இடம் பிடித்த அணிக்கு, 50,000 ரூபாயும், இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு, 25,000 ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட்டன. கோப்பையும் வழங்கப்பட்டது.

