/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உரிமைகளை நிலைநாட்டி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவேன்: ஜெயவர்தன் வாக்குறுதிகள்
/
உரிமைகளை நிலைநாட்டி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவேன்: ஜெயவர்தன் வாக்குறுதிகள்
உரிமைகளை நிலைநாட்டி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவேன்: ஜெயவர்தன் வாக்குறுதிகள்
உரிமைகளை நிலைநாட்டி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவேன்: ஜெயவர்தன் வாக்குறுதிகள்
ADDED : ஏப் 16, 2024 09:52 PM
சென்னை:தென்சென்னை லோக்சபா தொகுதி வேட்பாளர் ஜெயவர்தன், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் உள்ள பெரும்பாக்கத்தில், பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் வெளியிட்டு தேர்தல் வாக்குறுதிகள்:
தென்சென்னை தொகுதியில், மத்திய அரசின் நிதியை பெற்று மிகப்பெரிய மருத்துவமனை அமைக்கப்படும். இ.எஸ்.ஐ., மருத்துவமனை மேலும் மேம்படுத்தப்படும். சோழிங்க நல்லுார் ஓ.எம்.ஆர்.,சாலையில் ஏற்படும்நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம், 18 மாதங்களில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
சைதாப்பேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக, தென் சென்னை முழுதும் குடிநீர் வினியோகிக்க நட வடிக்கை எடுப்பேன்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும். 'ஸ்மார்ட் சிட்டி, அம்ருத்' திட்டத்தின் கீழ் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தென் சென்னை தொகுதியில், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தடுக்கும் வகையில் நவீன வடிகால்கள் விரைந்து அமைக்கப்படும். மழை வெள்ளம் பாதிக்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தென்சென்னை தொகுதியின் உரிமையை நிலைநாட்டி, தொலைநோக்கு பார்வையுடன் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவேன்.
பெருங்குடி குப்பை கிடங்கு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குப்பையை, ஒன்றரை ஆண்டிற்குள் 100 சதவீதம் அகற்றுவேன்.மீட்டெடுக்கப்பட்ட நிலத்தை சமன் செய்து, மீண்டும் சதுப்பு நிலமாக மட்டுமே மாற்றுவேன்.
தேனாம்பேட்டையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தை மத்திய அரசு மூடியது. அதை திறக்க வலியுறுத்துவேன்.
தென்சென்னை தொகுதியில், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். புதிய மேம்பாலங்கள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்படும்.
அரசு நிதியை பெற்று நகர்புற வாழ்வாதார குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் குடியிருப்புகள் கட்டி தரப்படும். மேலும், காவலர் துறை மேம் படுத்த அதிநவீன வசதிகள்ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

