/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் விநாயகர் தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
/
திருக்கழுக்குன்றம் விநாயகர் தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
திருக்கழுக்குன்றம் விநாயகர் தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
திருக்கழுக்குன்றம் விநாயகர் தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 03, 2024 12:58 AM

திருக்கழுக்குன்றம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ் வரர் கோவில் உள்ளது. இங்கு சித்திரை பெருவிழா, 10 நாட்கள் நடைபெறும்.
ஏழாம் நாள் உற்சவமாக, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர், தனித்தனி திருத்தேரில் உலா செல்வர்.
இந்நிலையில், விநாயகருக்கான 30 அடி உயர தேரில், சிதிலமடைந்த துாண்கள் உள்ளிட்ட பழுது ஏற்பட்ட பகுதிகளை, கோவில் நிர்வாகம் புனரமைக்க முடிவெடுத்தது. அதற்காக அறநிலையத் துறை நிர்வாகத்திடம் நிதி கேட்டு, கோவில் நிர்வாகம் பரிந்துரைத்தது.
அதன் பின், கோவில் நிதியில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் புதுப்பிக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனால், கூடுதல் செலவாகலாம் என கருதி, பக்தர்களிடமும் நன்கொடை திரட்ட கோவில் நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
சித்திரை பெருவிழா வரும் 14ம் தேதி துவங்கவுள்ளதால், தேரின் சேதமடைந்த பகுதிகளை புதுப்பிக்கும் பணி, தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.