/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிலாவட்டம் நெல் சேமிப்பு கிடங்கு முதற்கட்ட கட்டுமான பணி துவக்கம்
/
சிலாவட்டம் நெல் சேமிப்பு கிடங்கு முதற்கட்ட கட்டுமான பணி துவக்கம்
சிலாவட்டம் நெல் சேமிப்பு கிடங்கு முதற்கட்ட கட்டுமான பணி துவக்கம்
சிலாவட்டம் நெல் சேமிப்பு கிடங்கு முதற்கட்ட கட்டுமான பணி துவக்கம்
ADDED : ஏப் 06, 2024 12:19 AM

மதுராந்தகம்:மதுராந்தகம், அச்சிறுபாக்கம், ராமாபுரம், எல்.எண்டத்துார் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் வாங்கப் படுகிறது.
இவை, சிலாவட்டம் பகுதியில், நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து, தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தன.
மழை மற்றும் வெயில் காலங்களில் இருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில், நிரந்தர தீர்வாக, 15,000 டன் கொள்ளளவு கொண்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில், நவீன நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் வாயிலாக, ரூபாய் 14.42 கோடி ரூபாய் மதிப்பில், மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணி, கடந்த 2 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது.
தற்போது, கட்டடத்திற்கான முதற்கட்ட பணிகளான பள்ளம் எடுத்தல், மண் சமன்படுத்துதல், பணியாளர்கள் தங்குவதற்கான இடவசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
ஒரு வருட காலத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

