/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் துாசு பறப்பதால் பயணியர் அவதி
/
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் துாசு பறப்பதால் பயணியர் அவதி
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் துாசு பறப்பதால் பயணியர் அவதி
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் துாசு பறப்பதால் பயணியர் அவதி
ADDED : ஏப் 04, 2024 11:58 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் பேருந்து நிலையம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், தற்காலிக பேருந்து நிலையம், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் 5,000த்திற்கும் மேற்பட்டோர், இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
'எம் - சாண்ட்' மண் கொட்டி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால், பேருந்துகள் உள்ளே வரும்போது துாசு பறந்து, பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் கண்களை பதம் பார்க்கின்றன.
எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் காலை மற்றும் மதிய வேளைகளில், தற்காலிக பேருந்து நிலையத்தில் தண்ணீர் ஊற்றி, துாசு பறப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என,பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.