/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிழற்குடையில் விளக்குகள் எரியாததால் பயணியர் அச்சம்
/
நிழற்குடையில் விளக்குகள் எரியாததால் பயணியர் அச்சம்
நிழற்குடையில் விளக்குகள் எரியாததால் பயணியர் அச்சம்
நிழற்குடையில் விளக்குகள் எரியாததால் பயணியர் அச்சம்
ADDED : ஏப் 04, 2024 11:59 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு பேருந்து டிப்போ அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், அச்சிறுபாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்பேருந்துகள் நின்று செல்கின்றன.
மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, அரசு கலைக்கல்லுாரிக்கு செல்லும் மாணவ -- மாணவியரும் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.
இங்கு உள்ள இரண்டு பேருந்து நிழற்குடைகளில் உள்ள மின்விளக்குகள் எரியாததால், முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் பயணிய ருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பயணியர் கூறியதாவது:
இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையில், பல மாதங்களாக விளக்குகள் எரிவதில்லை. மேலும் பேருந்து நிறுத்தம் முழுதும் மணல் திட்டுகள் படிந்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டு குப்பை நிறைந்து காணப்படுகிறது.
எனவே, இவற்றை சுத்தம் செய்து பழுதடைந்து உள்ள மின்விளக்குகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

