/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மில்க் ஷேக்'கில் பல்லி? ஹோட்டலுக்கு அபராதம்
/
'மில்க் ஷேக்'கில் பல்லி? ஹோட்டலுக்கு அபராதம்
ADDED : ஏப் 16, 2024 06:20 AM
அண்ணா நகர்: அண்ணா நகர், 4வது அவென்யூவில்,அக் ஷயம் ஹோட்டல் உள்ளது. இங்கு, நேற்று முன் தினம் இரவு, குழந்தைகளுடன் வந்த குடும்பத்தினர், உணவு அருந்தினர். அப்போது, குழந்தைகளுக்காக ஆர்டர்செய்த, 'மில்க் ஷேக்'கில் இறந்த நிலையில்,முழு பல்லி இருந்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இது குறித்து ஹோட்டல் ஊழியரிடம் கேட்ட போது,அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர்போலீசார், இருதரப்பினரிடம் பேச்சு நடத்தினர். பின், புகார் அளிக்காமல், 'மில்க் ஷேக்'கை கீழே கொட்டிவிட்டு குடும்பத்தினர் சென்றனர். இது குறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு,போலீசார் தகவல் தெரிவித்தனர்.
நேற்று காலை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தபட்ட ஹோட்டலில் ஆய்வு நடத்தி, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, 'நோட்டீஸ்' வழங்கி எச்சரித்துசென்றனர்.

