/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழி ஏரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
/
கருங்குழி ஏரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
கருங்குழி ஏரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
கருங்குழி ஏரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஏப் 24, 2024 01:31 AM

மதுராந்தகம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், கருங்குழி பெரிய ஏரி, 35 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதியில், தனிநபர்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் கால்வாயில் செடிகள், புதர்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி காணப்படுகின்றன.
கலங்கல் வழியாக செல்லும் நீர் கல்லாற்றில் கலந்து, கடலுக்கு செல்கிறது.
மேலும், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கலங்கல் நீர் செல்வதற்காக கட்டப்பட்ட சிறிய பாலப் பகுதியில், சிமென்ட் தடுப்பு கட்டைகள் சேதமடைந்து, தடுப்புகள் இன்றி உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.