/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் தீ தொண்டு வார விழிப்புணர்வு
/
செய்யூரில் தீ தொண்டு வார விழிப்புணர்வு
ADDED : ஏப் 16, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்:மும்பை துறைமுகத்தில், 1994ம் ஆண்டு ஏப்., 14ம் தேதி, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் நினைவாக, ஆண்டுதோறும் ஏப்., 14 முதல் 21ம் தேதி வரை, தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில், தீயணைப்பு துறையினர், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
செய்யூர் தீயணைப்புத் துறை சார்பில், செய்யூர், பவுஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில், தீ தொண்டு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதில், தீயணைப்பு நிலைய அலுவலர் அமல்தாஸ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

