/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுகாதார நிலையத்தை சீரமைக்க அரையப்பாக்கத்தில் எதிர்பார்ப்பு
/
சுகாதார நிலையத்தை சீரமைக்க அரையப்பாக்கத்தில் எதிர்பார்ப்பு
சுகாதார நிலையத்தை சீரமைக்க அரையப்பாக்கத்தில் எதிர்பார்ப்பு
சுகாதார நிலையத்தை சீரமைக்க அரையப்பாக்கத்தில் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 02, 2024 01:24 AM

மதுராந்தகம்,மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்நிலையத்தின் கீழ், அரையப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன் பெற, துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு, கர்ப்பிணியருக்கான பரிசோதனை மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்பகுதி முதியவர்களும் பயன் அடைந்தனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளாக, இந்த துணை சுகாதார நிலையம், வர்ண பூச்சு இன்றி பொலிவிழந்து உள்ளது. கட்டடத் தின் சில இடங்களில், சிறிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
கட்டடத்தின் உட்புறப் பகுதிகள் நல்ல நிலையில் உள்ளன. எனவே, இப்பகுதி மக்கள் நலனைகருத்தில் கொண்டு, துணை சுகாதார நிலைய கட்டடத்தை புதுப்பிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.