/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொக்கிலமேடு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
/
கொக்கிலமேடு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
கொக்கிலமேடு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
கொக்கிலமேடு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
ADDED : ஏப் 22, 2024 05:50 AM

மாமல்லபுரம் : கொக்கிலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுற்றுச் சுவர் இல்லாததால், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு, கொக்கிலமேடு, வெண்புருஷம் ஆகிய பகுதியினர் படிக்கின்றனர்.
பள்ளி வளாகத்தில், சென்னை அணுமின் நிலையம் அமைத்த பிரதான வகுப்பறை கட்டடம் உள்ளிட்ட மூன்று வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. பள்ளி வளாகத்திற்கு, பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய சுற்றுச்சுவர், நாளடைவில் பலவீனமடைந்தது.
கடந்த ஆண்டு, அணுமின் நிலையம் சார்பில், புதிய கட்டடம் கட்டியபோது, கட்டுமான தளவாடப் பொருட்களை வளாகத்திற்குள் கொண்டுசெல்ல, வழி தேவைக்கேற்ப குறிப்பிட்ட பகுதி இடிக்கப்பட்டது.
அதன்பின், புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கக் கருதி, முழுநீள சுவரும் இடிக்கப்பட்டது. தற்போதும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் திறந்தவெளியாக உள்ளது.
பாதுகாப்பற்ற வளாகம், தற்போது ஓட்டுச்சாவடியாகவும் செயல்பட்டது. பள்ளி பாதுகாப்பு கருதி, கோடை விடுமுறை காலத்திற்குள் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.

