/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
பஸ் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு
/
பஸ் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு
ADDED : செப் 03, 2025 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியலுார்:-அரியலுார் அருகே அரசு பஸ் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
அரியலுார் மாவட்டம், கீழப்பழுவூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 55. தஞ்சாவூரில், சிறுநீரக சிகிச்சை பெற்ற அவரது தம்பி பாலசுப்பிரமணியன், 50, என்பவரை காரில் அழைத்துக் கொண்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கீழப்பழுவூரை சேர்ந்த முரளி, 35, காரை ஓட்டியுள்ளார். சாத்தமங்கலம் தனியார் சர்க்கரை ஆலை அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை கார் முந்த முயன்றது.
அப்போது, எதிரே வந்த அரசு பஸ் மீது கார் மோதியதில், விஜயலட்சுமி, முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாலசுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். கீழப்பழுர் போலீசார் விசாரிக்கின்றனர்.