sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

யு.எஸ்., ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்

/

யு.எஸ்., ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்

யு.எஸ்., ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்

யு.எஸ்., ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்


ADDED : செப் 01, 2025 10:52 PM

Google News

ADDED : செப் 01, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ், பெலாரசின் சபலென்கா உள்ளிட்டோர் முன்னேறினர்.

நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் ஜான்-லெனார்டு ஸ்டிரப் மோதினர். போட்டியின் போது கழுத்து, வலது தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட வலிக்கு முதலுதவி எடுத்துக் கொண்ட ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 64வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். தவிர இவர், ஒரு சீசனின் 4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரரானார் (38 வயது).

மற்ற 4வது சுற்று போட்டிகளில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 7-6, 6-3, 6-4 என, பிரான்சின் ஆர்தர் ரின்டர்க்கென்கை வீழ்த்தினார். அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-4, 6-3, 6-3 என செக்குடியரசின் தாமஸ் மச்சாக்கை தோற்கடித்தார்.

சபலென்கா வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சா மோதினர். இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்ற 4வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 6-2 என, சகவீராங்கனை ஆன் லியை வீழ்த்தினார். செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 1-6, 7-6, 6-3 என, அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்டை தோற்கடித்தார். கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 4-6, 7-5, 2-6 என செக்குடியரசின் மார்கெடா வான்ட்ரூசோவாவிடம் தோல்வியடைந்தார்.

இந்திய ஜோடி ஏமாற்றம்

ஆண்கள் இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், விஜய் சுந்தர் பிரஷாந்த் ஜோடி 4-6, 3-6 என பிரேசிலின் பெர்னாண்டோ ராம்போலி, ஆஸ்திரேலியாவின் ஜான்-பாட்ரிக் ஸ்மித் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

மாயா அபாரம்

ஜூனியர் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மாயா ரேவதி, சீனாவின் ஜாங்-கியான் வெய் மோதினர். இதில் மாயா 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

* ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ் சவுகான், கிரிஷ் தியாகி தோல்வியடைந்தனர்.






      Dinamalar
      Follow us