UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 09:15 PM

ஓய்வு பெற்றார் வாவ்ரின்கா
பசல்: சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா, செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா மோதினர். இதில் வாவ்ரின்கா 5–7, 6–7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வாவ்ரின்கா அறிவித்தார். ஏ.டி.பி., ஒற்றையரில் 3 கிராண்ட்ஸ்லாம் உட்பட 16 பட்டம் வென்ற இவர், பீஜிங் ஒலிம்பிக் (2008) இரட்டையரில் சகவீரர் ரோஜர் பெடரருடன் இணைந்து தங்கம் வென்றார்.
ஆர்சனல் அணி அதிர்ச்சி
லண்டன்: இங்கிலாந்தில், இங்கிலீஷ் லீக் கோப்பை கிளப் கால்பந்து 67வது சீசன் நடக்கிறது. இதன் ‘ரவுண்டு–16’ போட்டியில் பிளீட்வுட் டவுன், ஆர்சனல் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1–1 என சமநிலையில் இருந்தது. பின் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஏமாற்றிய ஆர்சனல் அணி 3–5 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் பிராட்போர்டு சிட்டி அணி 2–0 என, பீட்டர்போரோ யுனைடெட் அணியை வென்றது.
