/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ராஷ்மிகா, சஹாஜா வெற்றி: சென்னை ஓபன் முதல் சுற்றில்
/
ராஷ்மிகா, சஹாஜா வெற்றி: சென்னை ஓபன் முதல் சுற்றில்
ராஷ்மிகா, சஹாஜா வெற்றி: சென்னை ஓபன் முதல் சுற்றில்
ராஷ்மிகா, சஹாஜா வெற்றி: சென்னை ஓபன் முதல் சுற்றில்
ADDED : அக் 29, 2025 10:22 PM

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் ராஷ்மிகா, சஹாஜா வெற்றி பெற்றனர்.
சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ராஷ்மிகா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சஹாஜா, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மோதினர். அபாரமாக ஆடிய சஹாஜா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 1-6, 2-6 என குரோஷியாவின் டோனா வெகிக்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா, கிம்பர்லி பிர்ரெல், ஸ்டிரோம் ஹன்டர், சீனதைபேயின் ஜோனா கார்லாண்ட், பிரான்சின் டயான் பாரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

