/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சென்னை ஓபன்: காலிறுதியில் சசிகுமார்
/
சென்னை ஓபன்: காலிறுதியில் சசிகுமார்
ADDED : பிப் 08, 2024 11:20 PM

சென்னை: சென்னை ஓபன் சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சசிகுமார் முகுந்த் முன்னேறினார்.
சென்னையில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், துனிசியாவின் மோயஸ் எச்சார்குய் மோதினர். 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய சசிகுமார், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். முடிவில் சசிகுமார் முகுந்த் 7-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரித்விக், நிக்கி பூனாச்சா ஜோடி 5-7, 6-1, 10-7 என சகநாட்டை சேர்ந்த பரிக்சித் சோமனி, மணிஷ் சுரேஷ் குமார் ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி 4-6, 6-4, 10-6 என நெதர்லாந்தின் டான் ஆடேடு, பிரான்சின் யுகோ பிளான்செட் ஜோடியை வீழ்த்தியது.
மற்ற காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் காடே - யு ஹசியோவ் ஹசு (சீனதைபே), இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - ஆன்ட்ரி பெக்மேன் ஜோடி தோல்வியை தழுவின.

