/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குண்டு எறிதல்: கிருஷ்ணா 'வெள்ளி'
/
குண்டு எறிதல்: கிருஷ்ணா 'வெள்ளி'
ADDED : மார் 02, 2026 10:33 PM

நியூயார்க்: உள்ளரங்கு தடகளத்தின் குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை கிருஷ்ணா வெள்ளி வென்றார்.
அமெரிக்காவில், 'மவுன்டைன் வெஸ்ட்' சர்வதேச உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் பங்கேற்றார்.
முதல் வாய்ப்பில் 16.30 மீ., எறிந்த கிருஷ்ணா, அடுத்த இரு வாய்ப்புகளை வீணடித்தார். மூன்றாவது, 4வது வாய்ப்புகளில் முறையே 16.27, 16.64 மீ., எறிந்த இவர், கடைசி வாய்ப்பில் அதிகபட்சமாக 17.09 மீ., எறிந்தார். ஒட்டுமொத்தமாக 2வது இடம் பிடித்த கிருஷ்ணா, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா, சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். கடந்த மாதம் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் நடந்த போட்டியில் 16.83 மீ., எறிந்த இவர், வெண்கலப் பதக்கத்துடன் தேசிய சாதனை படைத்திருந்தார்.
அமெரிக்க வீராங்கனை மகாய்லா லாங் (17.69 மீ.,) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை எரின் பிரவுன் (15.34 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார்.

