/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கி சுடுதல்: ஈஷா முதலிடம்
/
துப்பாக்கி சுடுதல்: ஈஷா முதலிடம்
ADDED : ஏப் 27, 2024 11:00 PM

புதுடில்லி: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் ஈஷா சிங், அர்ஜுன் சிங் சீமா முதலிடம் பிடித்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்க, இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி டில்லியில் நடந்தது. நேற்று 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு 2வது சுற்று நடந்தது. பெண்களுக்கான பைனலில் ஈஷா சிங் 244.9 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றினார். ரிதம் சங்வானுக்கு (241.8 புள்ளி) 2வது இடம் கிடைத்தது.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு 2வது சுற்று பைனலில் 244.6 புள்ளிகளுடன் அர்ஜுன் சிங் சீமா முதலிடத்தை தட்டிச் சென்றார். ரவிந்தர் சிங் (242.4) 2வது இடத்தை கைப்பற்றினார். ஆண்கள், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு 2வது சுற்று பைனலில் திவ்யான்ஷ் சிங் பன்வார், இளவேனில் முதலிடம் பிடித்தனர்.

