தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சீன ஓபன் டென்னிஸ்: கின்வென் ஜெங் 'சாம்பியன்'

சீன ஓபன் டென்னிஸ்: கின்வென் ஜெங் 'சாம்பியன்'

சீன ஓபன் டென்னிஸ்: கின்வென் ஜெங் 'சாம்பியன்'


UPDATED : அக் 11, 2026 10:25 PM

ADDED : அக் 11, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 10:25 PM ADDED : அக் 11, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஜிங்: சீனாவின் பீஜிங் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, சீனாவின் கின்வென் ஜெங் மோதினர். ஒரு மணி நேரம், 42 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கின்வென் ஜெங் 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

மெஸ்ஸி 2 கோல்

மயாமி: அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த மேஜர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் இன்டர் மயாமி, டி.சி. யுனைடெட் அணிகள் மோதின. இதில் லுாயிஸ் சாரஸ் (3, 39வது நிமிடம்), மெஸ்ஸி (47, 60வது) தலா 2 கோல் அடித்து கைகொடுக்க, இன்டர் மயாமி அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது, நடப்பு சீசனில் மெஸ்ஸியின் 23வது கோல். இன்டர் மயாமி அணி, 28 போட்டியில், 13 வெற்றி, 10 'டிரா', 5 தோல்வி என, 49 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

டென்மார்க் வீராங்கனை கலக்கல்

வாண்டா: பின்லாந்தில், ஆர்க்டிக் ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் டென்மார்க்கின் மியா பிளிச்பெல்ட், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானன் மோதினர். இதில் பிளிச்பெல்ட் 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஆஸி., வீரர் அசத்தல்

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 7--6, 6-4 என ஜப்பானின் ரெய் சகமோட்டோவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-7, 6-7 என, பிரான்சின் ஆர்தர் கியாவிடம் போராடி தோல்வியடைந்தார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 6-7, 6-3 என, பிரான்சின் ஹாலிசை வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us