/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கத்தார் ஸ்குவாஷ்: வேலவன் ஏமாற்றம்
/
கத்தார் ஸ்குவாஷ்: வேலவன் ஏமாற்றம்
ADDED : மே 25, 2024 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோகா: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் காலிறுதியில் வேலவன், அபய் சிங் தோல்வியடைந்தனர்.
கத்தார் தலைநகர் தோகாவில், சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் தரெக் மொமன் மோதினர். இதில் 'நடப்பு தேசிய சாம்பியன்' தமிழகத்தின் வேலவன் 1-3 (9-11, 11-8, 4-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அபய் சிங் 0-3 (6-11, 9-11, 4-11) என மலேசியாவின் ஈன் யோவ் என்ஜியிடம் தோல்வியடைந்து ஏமாற்றினார்.

