/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மனு பாகர் ஆதிக்கம்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்
/
மனு பாகர் ஆதிக்கம்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்
மனு பாகர் ஆதிக்கம்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்
மனு பாகர் ஆதிக்கம்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்
ADDED : மே 17, 2024 10:35 PM

போபால்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் மனு பாகர் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') முதலிடம் பிடித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி போபாலில் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' 3வது சுற்று பைனலில் 241.0 புள்ளிகளுடன் மனு பாகர் முதலிடத்தை கைப்பற்றினார். ஏற்கனவே இவர், 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு போட்டியிலும் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை ஈஷா சிங் (240.2 புள்ளி), ரிதம் சங்வான் (220.3) பிடித்தனர்.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' 3வது சுற்று பைனலில் நவீன் (246.8 புள்ளி) முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த நான்கு இடங்களை சரப்ஜோத் சிங் (242.4), அர்ஜுன் சிங் சீமா (218.8), வருண் தோமர் (197.3), ரவிந்தர் சிங் (176.9) கைப்பற்றினர்.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' 3வது சுற்றுக்கான பைனலில் முதலிடத்தை ரமிதா (252.6) கைப்பற்றினார். இளவேனிலுக்கு (252.1) 2வது இடம் கிடைத்தது.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' 3வது சுற்று பைனலில் முதல் மூன்று இடங்களை ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ் (252.5), திவ்யான்ஷ் சிங் பன்வார் (252.5), அர்ஜுன் பாபுதா (229.9) பிடித்தனர்.

