உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 11, 2026 06:52 PM
ADDED : அக் 11, 2026 06:38 PM

அ நிறம் | அளவு
மெல்போர்ன்: மெல்போர்ன் மாரத்தான் ஓட்டத்தில் கென்ய வீரர் கிப்சோகே, இலக்கை வேகமாக கடந்து புதிய சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் மாரத்தான் ஓட்டத்தின் 48வது சீசன் நடந்தது. இதில், 2 முறை (2016, 2020) ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் எலியுட் கிப்சோகே 41, பங்கேற்றார். பந்தய துாரத்தை 2 மணி நேரம், 9 நிமிடம், 10 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இவர், மூன்று ஆண்டுகளுக்கு பின், மாரத்தானில் சாம்பியன் பட்டம் வென்றார். கடைசியாக 2023ல் பெர்லினில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்திருந்தார். தவிர இவர், மெல்போர்ன் மாரத்தானில் இலக்கை அதிவேகமாக கடந்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2022ல், கென்யாவின் திமோதி கிப்லகட் ரோனோ (2:09:12) சாதித்திருந்தார்.
