/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியா-ஜப்பான் 'டிரா': பெண்கள் ஆசிய ஹாக்கியில்
/
இந்தியா-ஜப்பான் 'டிரா': பெண்கள் ஆசிய ஹாக்கியில்
ADDED : செப் 06, 2025 09:44 PM

ஹாங்சோவ்: பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா, சீனா அணிகள் மோதிய லீக் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
'பி' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, ஜப்பானை சந்தித்தது. ஜப்பானின் ஹிரோகா முராயமா (10வது நிமிடம்) முதல் கோல் அடித்தார். இதற்கு, 30வது நிமிடத்தில் இந்தியாவின் ருதுஜா ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். முதல் பாதி முடிவு 1-1 என சமநிலையில் இருந்தது.
ஜப்பானுக்கு 58வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் சிகோ புஜிபயாஷி ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடத்தில் (60வது) இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
முதல் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா, 4 புள்ளிகளுடன் (+11 கோல் வித்தியாசம்) முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் அணி (4 புள்ளி, +9 கோல் வித்தியாசம்) 2வது இடத்தில் உள்ளது.
மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் தாய்லாந்து அணி 2-1 என, சிங்கப்பூரை வீழ்த்தியது.