இந்தியாவுக்கு ஆறாவது கோப்பை: ஜூனியர் ஆசிய கோப்பையில்...
இந்தியாவுக்கு ஆறாவது கோப்பை: ஜூனியர் ஆசிய கோப்பையில்...
ADDED : செப் 13, 2026 10:00 PM

மொகி: ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய ஆண்கள் அணி ஆறாவது கோப்பை கைப்பற்றியது. பைனலில் தென் கொரியாவை 4-1 என சாய்த்தது.
சீனாவில், ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 10வது சீசன் (20 வயது) நடந்தது. நேற்று நடந்த பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி துவங்கிய 9 வது நிமிடத்தில் அஜீத், இந்திய அணிக்காக முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அன்மோல் எக்கா (13) ஒரு கோல் அடித்தார். இத்தொடரில் இவர் அடித்த 17 வது கோல் இது. பின், பிரப்தீப் (21) கைகொடுக்க, முதல் பாதியில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இந்திய அணியின் மவுரியா (50), தென் கொரிய தரப்பில் லீ (54) என தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆறாவது கோப்பை
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி (2004, 2008, 2015, 2023, 2024, 2026), தொடர்ந்து 4 முறை உட்பட, 6 வது முறையாக சாம்பியன் ஆனது.
இந்திய பெண்கள் 'ஹாட்ரிக்'
பெண்களுக்கான ஆசிய கோப்பை பைனலில் இந்தியா, சீனா மோதின. 17வது நிமிடத்தில் இந்தியாவின் சானிகா ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் 2023, 2024, 2026 என தொடர்ந்து மூன்றாவது முறையாக ('ஹாட்ரிக்') சாம்பியன் ஆனது இளம் இந்திய அணி.
