/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஊக்கமருந்து... இந்தியா அதிகம்
/
ஊக்கமருந்து... இந்தியா அதிகம்
ADDED : ஏப் 04, 2024 10:44 PM

புதுடில்லி: உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் (டபிள்யு.ஏ.டி.ஏ.,) சார்பில் வருடாந்திர சோதனை அறிக்கை வெளியானது. குறைந்தது 2000க்கும் மேல் சோதனை நடத்தப்பட்ட நாடுகள், அதில் சிக்கியவர்கள் எண்ணிக்கை குறித்த விபரம் இடம் பெற்றுள்ளது. சீனாவில் அதிகபட்சமாக 19,228 ரத்தம், சிறுநீர் மாதிரி சோதனை நடந்தன. அடுத்து ஜெர்மனி (13,653), ரஷ்யாவில் (10,186) அதிக சோதனை நடந்தன. இந்த வரிசையில் 3865 சோதனை நடத்திய இந்தியா 11வது இடத்தில் உள்ளது.
சோதனையில் சிக்கியவர்கள் அடிப்படையில் இந்தியா 'நம்பர்-1' ஆக உள்ளது. 3865 சோதனையில் 125 வீரர், வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கியுள்ளனர். இது 3.2 சதவீதமாக உள்ளது.
தென் ஆப்ரிக்கா (2.9%), கஜகஸ்தான் (1.9%), நாடுகள் அடுத்தடுத்து உள்ளன. மிக குறைந்த பேர் சிக்கியவர்கள் வரிசையில் சீனா (0.2%), ஜெர்மனி (0.3%) உள்ளன.

